Pages

Saturday, January 29, 2022

 

பேச்சிலும் சிக்கனம் தேவை

 

BE FRUGAL IN YOUR SPEECH*


 

நமஸ்காரம் செய்வதைத் தண்டம் சமர்ப்பித்தல் என்று
சொல்வார்கள்.இந்த உடம்பு நம்முடையது அல்ல.
கடவுளுடையது என்ற எண்ணத்துடன் கீழே விழுவது
தான் சாஷ்டாங்க நமஸ்காரம். நான் என்ற அகங்கார

எண்ணத்தைப் போக்குவது தான் இதன் நோக்கமாகும்.

 

THE ACT OF PROSTRATING IS CALLED 'DANDAM SAMARPITHAL'. 

TO FALL AT THE FEET OF LORD WITH THE THOUGHT THAT THIS
BODY IS GIVEN BY HIM AND HENCE IS NOT MINE IS THE UNDERLYING
CONCEPT OF PROSTRATING.
THE PURPOSE IS TO GET RID OF EGO. *

 

அகிம்சையைப் பின்பற்றினால், நம்மை அறியாமலேயே மனம்,
வாக்கு,காயம் ஆகிய மூன்றிலும் அதன் சக்தி பரவத் தொடங்கும்.
நாம் இருக்கும் இடத்தில் சாந்தமும் தெய்வீகமும் தவழத்தொடங்கும்.

 

IF WE FOLLOW THE PATH OF AHIMSA (NOT HURTING ANYONE), EVEN
WITHOUT OUR KNOWING ITS POWER WILL START SPREADING IN OUR MIND,
SPEECH AND BODY. WE WILL EXPERIENCE PEACE AND DIVINITY
WHEREVER WE ARE. *

 

வாக்கினாலும், மனத்தினாலும், உடம்பாலும் பாவங்கள் செய்து
வருகிறோம். மாறாக புண்ணியசெயல்களைச் செய்து பாவத்தைக்
கரைத்து விடவேண்டும். நன்மைகளைச் செய்வதற்குத் தான்
நமக்கு பிறவியைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.

 

WE COMMIT A LOT OF SINS WITH OUR BODY, SPEECH AND MIND. 
WE SHOULD ABSOLVE OURSELVES OF THESE SINS BY EARNING
MERIT THROUGH GOOD DEEDS.

GOD HAS GIVEN US THIS BIRTH ONLY TO DO GOOD TO OTHERS. *

 

பணத்தை மட்டுமே சிக்கனமாக செலவழிக்க வேண்டும்
என்று நினைக்கிறோம்.
ஆனால், பேசுவதிலும் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

 

WE THINK THAT WE SHOULD BE FRUGAL ONLY IN SPENDING MONEY
BUT WE SHOULD PRACTICE FRUGALITY IN SPEECH ALSO. *

 

அனாதைக் குழந்தைகளை ஆதரிப்பது, ஏழைகளுக்கு உதவுவது,
பசுவை காப்பது, இப்படி எந்தவிதத்திலாவது நாம் முடிந்த
சேவைகளைச் செய்யவேண்டும்.

 

TAKING CARE OF DESTITUTE CHILDREN,  HELPING THE POOR,
PROTECTING THE COW ARE SOME WAYS TO DO GOOD TO
THE WORLD. -

 

காஞ்சிப்பெரியவர் THE MAHAN OF KANCHI

 

 

Sunday, February 23, 2020

Monday, July 20, 2015

இயற்கையில் இறைவன்!

 இறைவன் இருக்கின்றானா; இருந்தால் இறைவனை காணமுடியுமா என்ற விதண்டா வாதத்திற்கு நான் வரவில்லை.











நம்மைச்சுற்றி அவ்வப்போது நிகழும் இயற்கையின் வண்ண ஜாலங்களில் நம் கருத்தினைச்செலுத்தினால் இறைவன்
பல ரூபங்களின் வாயிலாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டு இருப்பது தெரிய வரும்!
1.மொட்டு மலர்ந்து ஒளி விடும்போது.

             [நன்றி-ராஜராஜெஸ்வரி]





















[நன்றி-ராஜராஜெஸ்வரி]









2.அதிகாலை சூரியன் உதயமாகும் போது வானில் நிகழும் வண்ண ஜாலங்களின் போது
























3.மழை காலங்களில் சில நேரங்களில் தோன்றும் வானவில்லின் வண்ண ஜாலங்களின் போதும்










இறைவனின் தரிசனத்தினை நன்கு உணரலாம்.

சூரிய உதயம்--[எடுத்த நேரம்] காலை 5.30 முதல் 5.45 வரை.
வானவில் --[எடுத்த நேரம்] மாலை 4.30 முதல் 4.15 வரை.




பத்மாசூரி